கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்
அலகு 8 - கற்றல்
வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்
2 மதிப்பெண் வினா
1.
கற்றல் விதிகள் இரண்டினைக் கூறுக.
·
அறிவு சார்ந்த கற்றல் விதிகள்
·
தூண்டல் - துலங்கல் கற்றல் விதிகள்
4 மதிப்பெண் வினா
2.
பொதுவான கற்றல் விதிகள் பற்றி எழுதுக.
a) தூண்டல் - துலங்கல்
கற்றல் விதிகள் (Stimulus- Response Bond)
·
நடத்தைக் கோள்கையினர் கற்றல் தூண்டல் துலங்கலை
அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது என்று கூறுகின்றனர்.
·
முயன்று தவறி கற்றல், ஆக்கநிலையுறுத்தல் போன்றவை தூண்டல் – துலங்கல் கற்றலில் அடங்கும்.
b)
அறிவு சார்ந்த கற்றல் விதிகள் (Cognitive Learning)
·
தூண்டல் - துலங்கல் கற்றல் விதிகள் குருட்டு மனப்பாடம்
செய்வதற்கே துணைபோகிறது.
·
அறிதல், புரிதல், பகுத்தல், தொகுத்தல், கண்டுணர்தல் (synthesizing)
போன்ற அறிவு சார்ந்த செயல்களை உள்ளடக்கியதே கற்றல் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.
·
உட்காட்சி வழிக் கற்றல் ஆனது அறிவு சார்ந்த கற்றலுக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
3.
தார்ண்டைக்கின் கற்றல் விதிகள்
a) ஆயத்த விதி (Law
of Readiness)
·
இந்த
விதி கற்றலில் பங்கேற்கும் நிலையில் கற்பவர் இருப்பதை குறிக்கிறது.
·
தார்ண்டைக்,
ஆயத்தம் என்பது செயலுக்கான முன் தயாரிப்பு (Preparation
of action) என்கிறார்.
·
கற்றலுக்கு
மிக முக்கியமானது. விரைவில் பயனுள்ள திருப்தியோடு கற்க வேண்டுமெனில் கற்க தயாராக
இருக்க வேண்டும் (சூழல், வசதிகள், மனநிலை அறிதல்)
·
மாணவர்களின்
கவனம், ஆர்வம், அவாவுநிலை ஆகியவற்றை
ஊக்கப்படுத்தி அளவிடலாம்.
b) பயிற்சி விதி
(Law of Practice)
·
சூழல்
மற்றும் துலங்களுக்கிடையே உள்ள இணைப்பு பலமாகவும் சமமாகவும் இருப்பின், இணைப்பை
(Bond) அதிகரிகரிக்கும்.
·
தொடர்ந்து
பயிற்சி அளிப்பதால் இணைப்பு பலப்படுத்தப்படும். இதனை பயன்படுத்துதல் விதி (Law
of Use) என்கிறோம். பயிற்சி
தொடராதுபோது இணைப்பு இல்லாமல் போகும். அதாவது இணைப்பு பலவீனம் ஆகிறது
அல்லது மறந்து போகிறது. இது பயன்படுத்தாமை விதி (Law
of Disuse) என்கிறோம்.
·
இது
கற்றலில் மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல், பயிற்சிக் குறித்த முக்கியத்துவத்தை
வலியுறுத்துகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் செய்வது மட்டுமே மாற்றத்தை தராமலும்
போகலாம். பரிசும் பாராட்டும் போது கற்றல் செயல்முறையை வலுப்பெறச்
செய்கிறது.
·
விளைவு
விதியில் வெகுமதி மற்றும் தண்டனை இரண்டும்
ஒன்றல்ல. எதிர்விளைவுடையவை. வெகுமதி தண்டனை விட அதிக அளவில் தாக்கம்
ஏற்படுத்துகிறது.
c) விளைவு விதி
·
கற்றல்
திருப்தியை விளைவித்து, கற்பவர் மகிழ்ச்சி பெறும்போது கற்றல்
நடைபெறுவதாக நடைபெறுகிறது.
·
குழந்தை
தோல்வியடையும்போதோ அல்லது அதிருப்தி அடையும்போது, கற்றல் பாதையில்
முன்னேற்றம் தடைப்படுகிறது.
·
இனிமையான
அனுபவங்கள் நீடித்த தாக்கமும் அதனால் நீண்ட நினைவில் சேமிக்கப்படும்,
விரும்பத்தகாதவை உடனே மறந்துவிடும்.
·
கற்றலினால்
ஏற்படும் விளைவு கற்றலின் செயல்திறனைத் தீர்மானிக்கிறது
·
இந்த
விதி, கற்றல் செயலில் பரிசு மற்றும் தண்டனைகளின் முக்கியத்துவத்தை
விளக்குகிறது.
·
பரிசு
அல்லது வெகுமதியானது கற்றலில் ஊக்குவிக்கிறது,
குழந்தை அதே மன மகிழ்ச்சியோடு தொடர்பு செல்ல வழிவகைச் செய்கிறது. ஆனால் தண்டனையானது,
கற்றல் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது.
4.
வெவ்வேறு கற்றல் நிலைகள் (different stages
of learning) பற்றி விளக்குக.
a)
இயல் பூக்கம் (Inborn tendency)
·
உயிர்கள் பிறந்தபின் இயல்பாகவே கற்றுக்கொள்ளும்
வாய்ப்புகளும் உள்ளன. மீன் குஞ்சு பிறந்த உடனேயே நீந்துவதை இயல்பாகவே கற்றுக்கொள்கின்றன.
b)
போலச் செய்தல் / பின்பற்றிக் கற்றல் (Imitation)
·
குழந்தைகள் பிறரைப் பார்த்து அவர்களைப் போலவே பேசவும், நடக்கவும், செயல்படவும் முயற்சிக்கின்றது.
·
குழந்தைகளுக்கு அருகில் உள்ளோர் நல்லவர்களாகவும்,
நல்ல செயல்களைச் செய்பவர்களாகவும் அமைத்தால் அக்குழந்தை
அவர்களின் நற்குணங்களைப் பெற்று வளர்கின்றது.
c)
முயன்று தவறிக்கற்றல் (Trial and error learning)
·
குழந்தை தானாக எழுந்து நிற்க முயற்சிக்கிறது. அப்போது
சிலமுறை அது தன் முயற்சியிலிருந்து தவறி விழுவது தவறு இல்லை. அவ்வாறு விழுவதால்
அடுத்த முறை அத்தவற்றினை செய்யாமல் தன் முயற்சியில் வெற்றி அடைகின்றது.
·
மிதி வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வதையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
d) அறிவுசார் நிலைக்
கற்றல் (Cognitive learning)
·
ஒரு செயலை பல வழிகளில் சிந்தித்தும் அப்போது அதனை
செய்ய இயலாமல் போக வாய்ப்பு
·
உள்ளது. ஆனால் திடீரென மனதில் ஒரு பொறி தோன்றி அதனால்
அச்செயல் சட்டென ஒரு முடிவுக்கு வரும்.
·
அறிவுசார் நிலைக் கற்பது முந்தய அறிவு நிலைகளுக்கு
உட்பட்டதாகும்.
e)
அறிவின் உருவாக்கம் (Constructivism)
·
கற்றல் என்பது
அறிவின் உருவாக்கமே.
·
வாகனங்கள்' என்றால் என்ன? என்று கற்பிக்கும்போது ஒவ்வொரு குழந்தையும் தான் அதற்குமுன்
கண்ட வாகனத்தின் படத்தினை தனது மனதில் ஓடவிட்டு, பின்பு ஆசிரியர் காட்டும் மற்ற
வாகனங்களின் படத்தோடு ஒப்பிட்டு பல்வேறு வாகனங்கள்'
பற்றிய ஒரு புதிய அறிவினை உருவாக்கிக் கொள்கிறது.
f)
உள்ளுணர்வு மூலம் கற்றல் (Learning by consciousness)
·
இது ஒரு உயர்நிலைக் கற்றல் ஆகும்.
·
உள்ளுணர்வு என்பது ஒருவரை அப்படியே வெளிப்படுத்தும் கண்ணாடி
ஆகும். நம்மைச் சுற்றி என்னென்ன இருக்கவேண்டும் என்பதை நமது
உள்ளுணர்வே தீர்மானிக்கிறது. நாம் இன்று செய்யவேண்டிய பணிகள் அனைத்தும்
நமது உள்ளுணர்வினால் தீர்மானம் செய்யப்பட்டு ஒரு நிழல்படமாக நமது நினைவில் ஓடும்.
·
நல்லதொரு சிந்தனையின் உயர்நிலையாக உள்ளுணர்வு விளங்குகிறது.
5.
கேக்னேவின்
ஏழு கற்றல் படிநிலைகள் பற்றி எழுதுக.
|
படிநிலை |
எடுத்துக்காட்டு |
|
I.
சைகை
வழிக் கற்றல் (Signal Learning) |
ஆக்க நிலையுறுத்தல்
– நடத்தைகள் நிலைநிறுத்தல் |
|
II.
தூண்டல், துலங்கல்
மூலம் அறிதல் S – R Learning) |
விலங்கினங்கள் மற்றும் பறவைகள்
பற்றி கற்றல் - தூண்டல் தன்னிச்சையான துலங்கல் மூலம்
கற்றல் |
|
III.
உடல்
இயக்கம் (Motor learning) |
நீந்துதல், நடத்துதல், ஓடுதல் |
|
IV.
சங்கிலிக்
கற்றல் (Chain Learning) |
பேச, எழுத
கற்றல் – தூண்டல் அடுத்த துலங்கல் மூலம்
கற்றல் |
|
V. பல்வகை வேறுபடுத்திக் கற்றல் (Discrimination Learning) |
விலங்குகளிலிருந்து
பறவைகளை வேறுபடுத்தி அறிதல் |
|
VI.
விதிகள்
மூலம் கற்றல் (Rule Learning) |
வெப்பத்தால் பொருள்கள்
விரிவடையும் / A = l x b |
|
VII.
பிரச்சினையை
தீர்த்தல் Learning |
ஒன்றுக்குள் ஒன்று றுகிய
அடுக்குப் பாத்திரங்களைப்
பிரித்தெடுத்தல் / உயரிய படிநிலை கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பது |
10 மதிப்பெண் வினா
6. கற்றல் வகைகள் (types of learning) குறித்து விரிவாக விளக்குக.
·
பசியெடுத்தவுடன் முதலில் கால்களை அசைத்துப் பார்த்தது அம்மா
வரவில்லை,
பின்னர் உடல் கைகளை அசைத்தும் அம்மா வரவில்லை. பின்னர்
உரத்தக்குரலில் குழந்தை அழுதது. அம்மா வந்து பால் கொடுத்தாள். பின்னர் பசி
வந்தவுடன் குழந்தை அழுது பால் கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது. இதனை உட்காட்சி வழிக்கற்றல் என்றும்
கூறலாம். மனிதனின் முதல் செயல் ஆராய்ச்சி என்றும் கூறலாம்.
·
குழந்தை வளர வளர தாயிடமிருந்தும் சூழ்நிலைகளிடமிருந்தும் பலவற்றை
பார்த்தும், பின்பற்றியும், செய்தும், உணர்ந்தும், சிந்தித்தும், முயன்றும்
கற்றுக்கொள்கிறது.
a)
வாய்மொழிக் கற்றல் (Oral learning)
·
நாம் பேசும் மொழி, செய்தித் தொடர்புகள் போன்றவை வாய்மொழிவழிக் கற்றலுக்கு சிறந்த
எடுத்துக்காட்டுகள் ஆகும்.
·
பள்ளிக் குழந்தைகள் வாய்விட்டு படிப்பதையும் மனப்பாடம்
செய்வதையும் வாய்மொழிக் கற்றல் ஆகும்.
·
இதில் சைகைகள், படங்கள், குறியீடுகள், உருவங்கள், ஒலிகள், பேச்சுகள்
போன்றவை வாய்மொழிக் கற்றலுக்கு ஏதுவாய் அமையும்.
b)
இயக்கக் கற்றல் (Motor learning)
·
நீந்துதல், குதிரை சவாரி, வாகனங்களை இயக்குவது, இசைக்கருவிகளை மீட்டுவது, பலவித
·
கருவிகளை இயக்குவது, அறிவியல் சோதனைகள் செய்வது,
கணித வரைபடங்களை
வரைதல் போன்றவை இவ்வகை
கற்றலில் அடங்கும்.
·
இவ்வகை இயக்கத்திறன்களைக் கற்பதினால் ஒருவரின் இயக்கத்திறன்
அவர் மேற்கொள்ளும் செயலில் வேகத்தையும் துல்லியத்தையும், கற்றல்
தன்னம்பிக்கையும் அவர் மேற்கொள்ளும் செயலை எளிமையாக்கி மனத்திருப்தியையும்
அளிக்கும்.
·
விளையாட்டு முறையில் கற்றல்,
செயல்வழிக் கற்றல் போன்றவை குழந்தைகளின் இயக்கத்திறன்களை மேம்படுத்துவதுடன் மனச்சோர்வைப்
போக்கி கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
c)
பொதுமைக் கருத்துச்சார்ந்த கற்றல் (Concept
learning)
·
பல மனிதர்கள், பொருள்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய பொதுவான எண்ணங்களை
மனதில் உருவகித்துக்கொள்வதை பொதுமைக் கருத்துச்சார்ந்த கற்றல் என்று
கூறுகின்றோம்.
·
மரங்களில் வகைகள் அனைத்தும் மரம் என்ற பொதுமைக் கருத்தினில்
அடங்கிவிடுகிறது. இக்கற்றல் ஒரு அறிவு சார்ந்த கற்றலாகும் (cognitive
learning).
பயன்கள்: பொதுமைக் கருத்துச்சார்ந்த கற்றல்,
·
ஒரு பொருளை இனங்கண்டு கொள்வதற்கும்,
அதன் பெயரை அறிவதற்கும்,
அதைப் பற்றி புரிந்து கொள்வதற்கும்
·
ஒருவருடைய நடத்தைகள்,
வாய்மொழி,
குறியீடுகள், இயக்கங்கள் மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் தீர்மானிக்கவும்
·
நமது செயல், பேச்சு, புரிதல், காரணமறிதல், முடிவெடுத்தல் முதலியனவற்றை தீர்மானிக்கவும்
·
குழந்தைகளின் மனத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
d)
பிரச்சனையைத் தீர்த்தல் (Problem
solving)
·
பிரச்சனைனையைத் தீர்த்தல் ஓர் உயர்வகைக் கற்றலாகும். இது
ஒரு அறிவு சார்ந்த கற்றலாகும்.
·
இவ்வகைக் கற்றலில் காரணம் அறிதல்,
சிந்தித்தல்,
உற்றுநோக்குதல்,
பிரித்தறிதல்,
பொதுமைப் படுத்துதல்,
கற்பனைசெய்தல்,
முடிவை எட்டுதல்,
புதிய வழியில்
முயற்சித்தல், பரிசோதனை செய்து சரிபார்த்தல் போன்ற திறன்கள் அடங்கும்.
·
பழைய அனுபவங்கள், பயிற்சிகள், பெற்றிருக்கும் கல்வியறிவு,
பழக்கங்கள்,
மனப்பான்மைகள்,
ஆர்வங்கள்,
கற்ற தொகுப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டால் அவன் சிறந்த
பிரச்சனைகளைத் தீர்ப்பவனாகிறான்.
e)
தொடர் கற்றல் (Continuous learning)
·
கற்போரின் வயதிற்கும் மனத்திறனுக்கும் ஏற்ற வகையில் கற்றல்
பொருள்கள், கருவிகளை
வரிசைப்படுத்தி, திட்டமிடப்பட்ட படிநிலைகளை அளித்து தொடர் கற்றலை உருவாக்கலாம்.
·
தற்பொழுது நடைமுறையிலுள்ள செயல்வழிக் கற்றல் ஒரு தொடர்கற்றலாகும்.
·
ஒரு செயலை முழுமையாகக் கற்று முடித்தப் பின்னர் அடுத்த
செயலைக் கற்க முன்னேறிச்செல்வது கற்றல் தேக்கநிலையை வெகுவாக குறைக்கும்.
·
செயல்வழிக்கற்றலில் ஒரு குழந்தை தொடர்ந்து கற்று
முன்னேற்றமடைய ஆசிரியரும் பிற குழந்தைகளும் ஏதுவாளர்களாக செயல்படுவார்கள்.
f)
இணைத்துக் கற்றல் (Linked Learning)
·
தாய்மொழிச்சொற்களுடன் பிறமொழிச்சொற்களை இணைத்துக் கற்பதால் பிறமொழிகளை
எளிதாகக் கற்க முடிகிறது.
·
இவ்வகை கற்றலின் மூலம் மொழியறிவு வளர்ச்சிக்குத்
தேவைப்படும் சொல்லாட்சித் திறன், இலக்கணம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன் போன்றவற்றை எளிதில் பெறலாம்.
g)
பின்பற்றிக் கற்றல் (Imitation)
·
நம் அன்றாட வாழ்வில், பின்பற்றிக் கற்றல் முறைசார்ந்த மற்றும்
முறைசார முறைகளில் நடைபெறும்.
·
சமூக வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி, இயக்கத் திறன் வளர்ச்சி போன்றவை பின்பற்றிக் கற்றல் மூலம் பெரிதும் நடைபெறுகிறது.
·
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் துவக்கமே
பின்பற்றிக் கற்றலை அடிப்படைப்படையாக கொண்டுள்ளது.
·
பெற்றோர் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத்
திகழ வேண்டும்.
7. ஆக்கநிலையுறுத்தல் :
பாவ்லவ் (Classical conditioning : Pavlov) கோட்பாடு கற்றலுக்கு எவ்வாறு பயன்படுகிறது
குறித்து விளக்குக.
· தூண்டல் - துலங்கல்
தொடர்பு கற்றலுக்கு அடிப்படை என்று பாவ்லவ், ஸ்கின்னர் போன்றோர் கூறுகின்றனர்.
சோதனை
விளக்கம்:
·
சோதனையில் ஒரு நாயை அறையில் பூட்டி வைத்து, அதற்கு
எலும்புத்தூள் உணவு அளிக்கப்பட்டால், நாயின் வாயில்
உணவு படும்போது உமிழ்நீர் சுரக்கும். இங்கு உணவு இயற்கை தூண்டல்
(Natural Stimulus) மற்றும்
உமிழ்நீர் இயற்கை
துலங்கல். தொடர்பற்ற
தூண்டலான மணியோசை ஒலித்தவுடன் திரும்பி
பார்க்கிறது, ஆனால் எந்தத் துலங்களும் இல்லை.
சில நாள்கள் மணியோசை ஒலித்தப்பின் உணவு வழங்கப்படுகிறது.
·
மணியோசை
ஒலித்து உணவு கொடுக்காத நிலையிலும் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கிறது.
மணியோசை ஒலித்து உடனே உணவு கிடைக்கும் என்பதைக் கற்றுக் கொள்கிறது. இதனை ஆக்கநிலையுறுத்த
கற்றல் (Classical Conditioning Learning)
என்கிறோம்.
·
இயற்கை
தூண்டல்கள் – உணவு, பசி, நீர் பாலுணர்வு; செயற்கை தூண்டல் – மணியோசை, வெளிச்சம்
·
மணி ஓசைக்குப் பதிலாக வண்ண ஒளிகள்,
பல்வேறு வாசனைப்
பொருள்கள், நாயின் முகத்தில் காற்று வீசும்படி செய்தல் போன்ற தொடர்பற்ற தூண்டல்கள் ஏற்படுத்தப்பட்டு துலங்கல்
நிகழ்வது உறுதி செய்யப்பட்டது.
·
சிங்கம், புலி, கரடி
போன்ற கொடிய விலங்குகள் அவை செய்யும் ஒவ்வொரு வேடிக்கைச் செயல்களுக்கும்
அவற்றிற்கு மிகவும் பிடித்த சுவையானத் திண்பண்டம் கிடைக்கும் என்பதை
வேடிக்கைக்கு பழக்கும்போது ஆக்கநிலையுறுத்தல் மூலம் கற்றுக்கொண்டது.
·
ஆசிரியர் குழந்தைகளைப் பாராட்டுவது,
அன்புகாட்டி
அரவணைப்பது போன்ற செயல்கள்
அவர்களை ஆக்கநிலையுறுத்திக் கற்கத் தூண்டும்.
|
|
|
|
இயற்கை
தூண்டல் (உணவு) |
-----> |
இயற்கை
துலங்கல் (உமிழ்நீர் சுரத்தல்) |
|
தொடர்பற்ற
தூண்டல் (மணியோசை) |
-----> |
துலங்கல் (மணி
அடித்தவுடன் திரும்பி பார்த்தல்) |
|
தூண்டல் (உணவு
+ மணியோசை) |
-----> |
இயற்கை
துலங்கல் (உமிழ்நீர் சுரத்தல்) |
|
தொடர்பற்ற
தூண்டல் (மணியோசை) |
-----> |
இயற்கை
துலங்கல் (உமிழ்நீர் சுரத்தல்) |
8. பி.எப்.ஸ்கின்னரின் துலங்களைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தல் (Operant Conditioning) விரிவாக விளக்குக.
ஒரு கூண்டில் உணவு தரப்படாத வெள்ளை எலி விடப்பட்டது. இக்கூண்டின் ஒரு மூலையில் உணவு வைக்கப்பட்டது. கூண்டிலுள்ள ஒரு நெம்புகோலை அழுத்தும்போது எலிக்கு உணவு கிடைக்குமாறு செய்யப்பட்டிருந்தது.
·
எலி பசியுடன் கூண்டினுள் சுற்றிச் சுற்றி திரிந்தது. இது
தன்னிச்சையாக நெம்புகோலை (Lever) அழுத்தும்போது அதற்கு உணவுகிடைத்தது.
இவ்வாறு எதேச்சையாக நெம்புகோலை அழுத்துவதால் உணவு கிடைப்பதைக் கற்றுக்
கொண்டது எலி.
·
பின்னர் எலி நெம்பு கோலை அழுத்தும்போது அதனுடன்
சேர்த்து ஒரு வட்டமான ஒளி தோன்றும்போது மட்டுமே உணவு கிடைக்குமாறு
செய்தார். நெம்புகோலை அழுத்தினாலும் ஒளி தோன்றாதபோது உணவு கிடைக்காதவாறு
செய்யப்பட்டது.
·
சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் எலி ஒளி
வந்தபோது மட்டும் நெம்புகோலை அழுத்தி உணவை பெற முற்பட்டது. எலி தன்னிச்சையாக
சுற்றிச் சுற்றி வந்து காரணமின்றி நெம்புகோலை அழுத்தி வெளிப்படுத்தப்படும்
துலங்கல்கள், உணவால்
வலுவூட்டப்பட்டது.
·
பின்பு இந்த தன்னிச்சையான துலங்கலானது
ஆக்கநிலையுறுத்தப்படுகிறது என்பதை மேற்கூறிய சோதனை மூலமாக ஸ்கின்னர்
உறுதிபடுத்தினார். குழந்தைகளை பாராட்டுதல், பரிசுப் பொருள்கள் தருதல், விளையாட அனுமதித்தல் போன்றவை வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்தும்.
9.
கொக்லர் உட்காட்சி மூலம் கற்றல் (Kohler’s learning by Insight)
பற்றி விளக்குக
சோதனை 1:
இவர் சோதனையில் சிம்பன்சி குரங்கு ஒன்று கூண்டினுள்
விடப்பட்டது. கூண்டிற்கு வெளியே அதன் கைகளுக்கு எட்டாத தொலைவில் வாழைப்பழக்குலை
ஒன்று தொங்கவிடப்பட்டது. நீண்டதொரு கோல் ஒன்று கூண்டிற்கு வெளியே
போடப்பட்டது. தொடக்கத்தில் குரங்கு கைகளை நீட்டி பழங்களை எடுக்க முயன்று
தோல்வியுற்றது. இதனால் ஆர்வம் குன்றிய குரங்கு அங்குமிங்குமாக அலையத் தொடங்கியது.
தற்செயலாக வெளியேக் கிடந்த கோல் அதன் கவனத்தை ஈர்த்தது. உடனே அதன் அறிவுக்களத்தில்
கோலும் அடையவிரும்பும் வாழைப்பழத்திற்குமான தொடர்பை அறிந்துக் கொண்டது. இதன் பிறகு
கோலைப் பயன்படுத்தி வாழைப்பழத்தை எடுத்தது.
சோதனை 2:
இதில் ஒரு கோலிற்கு பதிலாக ஒன்றுடன் ஒன்று பொருந்தக்கூடிய இரண்டு
சிறிய கோல்கள் கூண்டினுள் போடப்பட்டது. இம்முறை ஒவ்வொரு கோலையும்
பயன்படுத்தி வாழைப்பழத்தை எடுக்க முயற்சி செய்து தோல்வியுற்றது. பின்னர்
சிந்தித்து இரண்டு கோல்களையும் ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பயன்படுத்தி
வாழைப்பழத்தை எடுக்க முயற்சி செய்து வெற்றிபெற்றது.
·
இச்சோதனையில் கற்றல் உடனடியாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் உட்காட்சி
வழிக்கற்றலே ஆகும்.
·
நியூட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், இராமனுஜம் போன்ற மேதைகள் உட்காட்சி வழிக்கற்றல் மூலம் அறிய கண்டுபிடிப்புகளை
நிகழ்த்தியுள்ளனர்.
·
ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு உட்காட்சி வழிக்கற்றலுக்கு வாய்ப்புகள்
அளித்து பழக்குவதன் மூலம் எதிர்காலத்தில் பல மேதைகளை உருவாக்கலாம்.
10.
வெவ்வேறு கற்றல் அணுகுமுறைகள் குறித்து விவரிக்க.
a)
நடத்தைக் கொள்கையாளர் அணுகுமுறை (Behaviorist approach)
·
கற்றல் என்பது தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும்
ஒரு செயல் என்கின்றனர் நடத்தைக் கொள்கையாளர்கள் ஜே.பி.வாட்சன்,
ஸ்கின்னர், பாவ்லவ்.
·
கற்றல் என்பது தூண்டல் துலங்கலால் இணைக்கப்பட்டு
நினைவில் நிலைக்கொள்வதாலும் இதனால் மனித நடத்தையில் மாற்றம் ஏற்படுவதாகவும்
கூறுகின்றனர்.
·
திரும்பத் திரும்பத் துண்டல் துலங்கல் இணைப்பு நிகழ்வதால் கற்றல்
வலுவூட்டப்படுவதாக கூறுகின்றனர்.
·
ஒரு கருத்தை வலியுறுத்த அது சார்ந்த பலவகைத் தூண்டல்களை
ஏற்படுத்தினால் கற்றல் வலுவடைவதாக கூறுகின்றனர்.
·
இக்கொள்கை குருட்டு மனப்பாடம் செய்வதற்கு உதவுகிறது.
இந்த அணுகுமுறையில் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
·
இந்த அணுகுமுறை குழந்தைகளைத் தேர்வுக்கு தயார் செய்யமட்டும்
உதவுமேயன்றி வாழ்க்கைக்கு பயன்படாது. இங்கு புரிதல்,
சிந்தித்தல்,
சோதித்தறிதல் போன்ற அறிவுச் சார்ந்த செயல்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படவில்லை.
b) அறிவுசார் கற்றல்
அணுகுமுறை (Cognitive approach)
·
அறிவுசார் கற்றல் கொள்கையாளர்கள் கற்றல் என்பது கவனித்தல்,
சிந்தித்தல்,
புரிதல், காரணகாரியமறிதல், முடிவெடுத்தல், சரிபார்த்தல், சோதித்தல்
போன்ற மனச் செயல்பாடுகளால் நிகழ்கின்றது என்கின்றனர்.
·
பரிசோதனை முறைகள், செயல்வழிக்கற்றல், பிரச்சனைத் தீர்த்தல், செய்து கற்றல், செயல் திட்ட முறை, தானே கற்றல், பொதுமைக்கருத்தினை உருவாக்குதல், பகுத்தறிதல், தொகுத்தறிதல் போன்றவை இத்தகைய அணுகுமுறையில் அடங்கும்.
·
அறிவுசார் கற்றல் நெடுங்கால நினைவிற்கு உதவுவது
மட்டுமன்றி எதிர்கால வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படும்.
·
அறிவுத்திறன் என்பது செயல்பாடுகளின் மூலமும்,
மொழியின் மூலமும்
தன்னையும், உலகையும் புரிந்துகொள்ளும் ஆற்றலை உள்ளடக்கியதாகும்.
c) அறிவின்
உருவாக்க அணுகுமுறை (Approach of Constructivism)
·
முன்பு கற்ற அறிவோடு, பின்னர் கற்கும் அறிவை தொடர்புபடுத்திக் கற்றுக்கொள்வது அறிவின் உருவாக்கம்
ஆகும். முன்னால் கற்ற, தெரிந்த செய்திகளிலிருந்து பின்னர் கற்கும் புதிய செய்திகளை தொடர்புபடுத்துவதன்
மூலம் முழுமையாக ஒன்றைக் கற்றுக்கொள்ள இயலும்.
·
இவ்வகை கற்றலை ஊக்குவிக்கும்போது ஆசிரியர்களின் பணி
இன்றியமையாதது ஆகும். குழந்தைகளுக்கு முன்னர் தெரிந்தவை என்னனென்ன என்பது
பற்றி ஆசிரியர் தெரிந்து புதியனவற்றை பின்னர் கற்றுக்கொடுக்க வேண்டும்.
·
குழந்தைகள் புதியன பற்றி அறிந்துகொள்ளத் துடிக்கும்
இயல்புடையவர். எனவே பல வகையான வினாக்களை எழுப்பி, அவற்றுக்கெல்லாம் முறையான சரியான விடைகளை ஆசிரியர்
கூறவேண்டும்.
·
அறிவுபூர்வமான ஊடகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தி ஊக்குவிக்கலாம். தன்னை
சுற்றியுள்ளவை மூலமோ அல்லது பல்வேறு தற்கால ஊடகங்கள் மூலமோ பல்வேறு
கருத்துக்களைப் பெறுகின்றனர்.
·
மாணவர்கள் கேள்வி கேட்பதற்கும், பயன்படுத்திப்பார்ப்பதற்கும்,
ஒருவரோடு ஒருவர்
பேசி முடிவெடுக்கவும், சிந்தித்துப்பார்ப்பதற்கும், புதிய கருத்துக்களை உருவாக்குவதற்குமான சூழ்நிலையை வகுப்பறை மற்றும் பள்ளியில் ஆசிரியார்கள்
உருவாக்கித் தரவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக