எண் 13 துரதிர்ஷ்டமானதா?

 

எண் 13 துரதிர்ஷ்டமானதா?

எண்கள் மனிதனின் தேவையின் அடிப்படையில் செயற்கையாக கண்டறியப்பட்டாலும், அது இன்று வளம் வராத ஓர் இடத்தை நாம் காண இயலாது. வீட்டின் இலக்கம், பேருந்து எண், நெடுஞ்சாலை எண், காலநேரம், புத்தக அடையாள எண், ... என பட்டியலிட தொடங்கினால் அது நீண்டு கொண்டே செல்லும். சில எண்கள் பல காரணங்களால் பயன்படுத்துவோரைப் பொறுத்து தவிர்க்கப்படுவதும் உண்டு. அந்த வகையில் அமையும் ஓர் எண் தான் 13. இந்த எண் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களால் தவிர்க்கப்படுவதற்கான காரணம் தான் என்ன?

இயேசு கிறிஸ்து அவர்கள் தனது 13 சீடர்களுடன் தனது கடைசி இரவு உணவை சாப்பிட்டார். அதற்கு பின்பாக 24 மணி நேரத்திற்குள், அவர் சிலுவையில் அறையப்பட்டார். அன்றைய இரவு உணவில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 13 ஆனது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களால் ஒரு துரதிர்ஷ்ட எண்ணாக நம்புகிறார்கள். இதனால் 13 என்ற எண்ணைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் அடுக்ககம் (Flot) அளவாக இருந்தாலும் சரி, தங்கும் விடுதியறையாக இருந்தாலும் சரி அதில் எண் 13 இடம்பெறாது பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் எண் 13 துரதிர்ஷ்ட எண்ணாக கருத வேண்டியதில்லை. மாறாக அதற்கு சிறப்பு பண்புகள் உண்டு. அவற்றைக் காணலாம்.

Ø  13 என்பது ஒரு பகா எண். மேலும் 13 ஐ திருப்பி (reverse) எழுதுகையில் கிடைப்பது 31, அதுவும் ஒரு பகா எண்.

Ø  13 இன் வர்க்கம் 169, இதனை (169) திருப்பி (reverse) எழுதுகையில் கிடைக்கும் எண் 961 ஆகும். 961 இன் வர்க்கமூலம் 31. இதனைத் திருப்பி (reverse) எழுதுகையில் எழுதினால் மீண்டும் 13 ஐப் பெறுகிறோம்.

கருத்துருவாக்கம்

த. ஐயப்பன், விரிவுரையாளர்,

DIET, இராணிப்பேட்டை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்