பள்ளிக்கூடம் என்பது என்ன?
பள்ளிக்கூடம் என்பது என்ன?
பள்ளிக்கூடம் என்பது பரவசம் தருகிற இடமாக எப்போது மாறப்போகிறது? பாடம் என்பது எப்போது சுயதேடலாகப் போகிறது? நிச்சயம் அம்மாற்றத்தைக் காணுகிற தாரக மந்திரம் நம்முடைய கைகளில்தான் இருக்கிறது என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
சொன்னதைத் திருப்பிச் சொல்கிற கல்வியும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்ற வீட்டுப்பாடமும், அட்சரம் பிறழாமல் அப்படியே எழுதுகிற தேர்வும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டம் காண்கின்றன. போனவருடம் வாசித்ததைக் கூட இந்த வருடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது.
Desirable change in skill, knowledge and attitude என்பதுதான் கற்றுக்கொள்வதன் சாராம்சம். இந்த கருத்துக்களிலிருந்து வளர்ச்சி நிகழாவிட்டால் படித்ததை அப்படியே ஒப்பித்தலால் எந்தப் பயனுமில்லை. கற்றுக்கொள்வது, நம்மை நிரந்தரமான மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக அமையவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக