சிந்திக்க தினம் ஒரு வாசகம்
...
§ வீரம் என்றால் வாழ்வு பயம் என்றால் மரணம்
-விவேகானந்தர்.
§ புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை,
விதைக்கப்படுகிறார்கள் - சேகுவேரா.
§ விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு
போதும் உறங்குவதில்லை - நற்சிந்தனைகளை குழந்தைகள் உள்ளத்தில் விதைப்போம் - நம்மாழ்வார்,
§ ஒருவனுக்கு மீனைக் கொடு;
அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன்
பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க
உணவளித்தவனாவாய் -லாவோட்சு.
§ எண்ணங்களை நல்லெண்ணங்களாக மாற்றிப்
பயிரிடுங்கள்; அது வெற்றியை அறுவடை செய்யும் -
வில்லியம் ஜேம்ஸ்.
§ ஒழுக்கம்
உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு
எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை -
கன்பூசியஸ்.
§ நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும்,
படிப்பதன் மூலம் படிக்கவும், ஓடுவதன் மூலமே
ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு
செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள் - அனடோல் பிரான்ஸ்.
§ சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை
இல்லை,
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை
- அப்துல் கலாம்.
§ மகிழ்ச்சி
என்பது அன்பு, கருணை மற்றும் நன்றியோடு ஒவ்வொரு
நிமிடமும் வாழும் ஆன்மிக அனுபவம்- டெனிஸ் வைட்லி
§ யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது
நேசிக்க கற்றுக்கொள் ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது
தான்.
§ வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்
வாழ்க்கையை முழுவதுமாக வாழவில்லை என்றுதான் அர்த்தம் - சேகுவேரா.
§ அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக்
காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை
கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள் - ஒரிசன் ஸ்வெட்
மார்டம்.
§ நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும்
இல்லையென்றால் அது நீ போகும் பதையே அல்ல வேறு யாரோ போன பாதை - பிடல் காஸ்ட்ரோ.
§ அறிவுடைய மேன்மக்கள் செய்யும் செயல்கள்
எப்போதும் உயர்வுடையதாகவே இருக்கும். அவர்கள் வறுமை நிலையில் இருந்தாலும் இதில்
இருந்து இம்மி அளவிலும் மாறமாட்டார்கள் - மகாவீரர்.
§ பயனுள்ள சொற்களைப் பேசுபவன் வாசமுள்ள
மலருக்கு ஒப்பாவான் - கௌதம புத்தர்.
§ உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது,
ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் -
கன்பூசியஸ்.
§ வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத்
தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும் - ஜான் கீட்ஸ்.
§ எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து
விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால் தான் காப்பாற்ற முடியும் - மகாத்மா
காந்தியடிகள்.
§ அசைக்கமுடியாத நம்பிக்கையும்,
திட சித்தமும் கொண்ட மனிதனே உலகை தன் வழியில் தானே உருவாக்கிக்
கொள்கிறான் - கதே.
§ எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும்,
அதை அன்பாலேயே வென்று விடுங்கள் - மகாத்மா காந்தியடிகள்.
§ அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கு
தயாராய் இருக்க வேண்டும் - கண்ணதாசன்.
§ இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள
வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை - சுப்பிரமணிய பாரதியார்.
§ வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது,
வாழ்க்கையும் புனிதமாகாது - ஜான் ரஸ்கின்.
§ தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத்
தேடித் பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார் - ஜார்ஜ் பெர்னாட் ஷா.
§ எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக்
கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும்
கெடுத்துவிடும் - சுவாமி.
§ மோசமான விமர்சனங்கள் எவ்வித
அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது
உதவி செய்வதோ அல்ல, இழிவுபடுத்துவதே அதன்
நோக்கம் - பார்பரா ஷெர்.
§ உங்கள் செயல்களுக்கு விளக்கம் அளிக்காதீர்கள்,
ஏனென்றால் உங்கள் நண்பர்களுக்கு அது தேவையில்லை மற்றும் உங்கள்
எதிரிகள் அதை நம்பப்போவதில்லை- எல்பர்ட் ஹப்பர்.
§ தாமரை இலை மீது தண்ணீர் போலவும்,
ஊசி முனை மீது கடுகு போலவும் இன்பங்களில் ஒட்டிக்கொள்ளாமல் எவன்
இருக்கிறானோ அவனே உயர்ந்தவன் -
கௌதம
புத்தர்.
§ படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ
இல்லையோ,
உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.
§ உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய
சக்தி வாய்ந்த ஆயுதம், கல்வி.
§ உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக
நீங்கள் இருக்க வேண்டும்.
§ உன்னால் முடியும் என்ற நம்பிக்கை
இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை
நிச்சயம் செய்ய முடியும்.
§ நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால்
நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.
§ வாழ்க்கையில் வெற்றி பெற,
உனது வேலையை விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னால்
மிகப்பெரிய இடத்தை அடைய முடியும்.
§ உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற
முடியாது,
ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள்
எதிர்காலத்தை மாற்றும்.
§ வருங்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.
நிகழ்காலத்தில் சிறப்பாய் செயல்பாட்டால் வருங்காலம் தன்னால் மாறும்.
§ எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக
பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
§ வெற்றி என்பது இறுதியானதும் அல்ல,
தோல்வி என்பது முடிவும் அல்ல.
§ வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு
வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு
செய்தால் தோல்வி.
§ நீங்கள் வெற்றியடைவது பற்றி கனவு
காணாதீர்கள், அதற்காக உழையுங்கள்.
§ சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான்.
ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்.
§ உனது தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை
நிறுத்திவிட்டு, உன் வெற்றிக்குத் தேவையான விஷயங்களைக்
கண்டறிய முற்படு.
§ இதுவரை ஒருவர் எந்தத் தவறும் செய்யவில்லை
என்றால்,
அவர் புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என அர்த்தம்.
§ பணம் சம்பாதியுங்கள்,
பொருளீட்டுங்கள், நலமாய் வாழுங்கள், ஆனால் அதற்காக எப்போதும் உங்களை மன அழுத்தத்தினால் அழித்துக்
கொள்ளாதீர்கள்.
§ எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு
தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான
தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும்.
§ பள்ளிகளில்
மாணவர்கள் படிப்பதைக் காட்டிலும், கற்றுக் கொள்வதே முக்கியம். படிக்க
புத்தகங்களும் கற்றுக் கொள்ள நல்ல ஆசிரியர்களும் தேவை – மகாத்மா பூலே
§ நம் கல்வி உருவாக்க வேண்டியது, அஞ்சி
ஒளியும் பிரஜையை அல்ல...
§ வலிமை, சுயகட்டுப்பாடு, ஆளுமை,
தலைமைப்பண்பு மிக்க இளைஞர்களை... டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
§ உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது
தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல, பிரச்சனைகளை
கண்டு நீங்கள் பயந்து விலகும்போது - மகாகவி பாரதியார்
§ எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுன்றனவோ, அங்கே விரைவில் நல்ல
மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே குவேரா
§ உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாளர்கள், தலை
சிறந்த மாமேதைகள் என சாதனையாளர்களை இணைக்கும் ஒரு விஷயம் இருக்குமானால், அது
இளம்பருவத்தில் அவர்கள் அனுபவித்த சுதந்திர தேடல்கள் தான்....
§ உறுதியான காரணங்களே உறுதியான செயல்களை
உருவாக்குகின்றன – சேக்ஸ்பியர்
§ வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அவர்களுக்கு அவமானம்
தெரியாது... விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடப்பார்கள்...
§ புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம்
ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
§ விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்.
இல்லையேல் உரம் - சே குவேரா
§ விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை... சேகுவேரா
§ வெற்றிக் கதைகளைப் படிக்க வேண்டாம்,
அதிலிருந்து ஒரே ஒரு செய்தியை மட்டுமே பெறுவீர்கள், தோல்வி கதைகளைப் படியுங்கள், அது வெற்றி பெறுவதற்கான
உதவிக்குறிப்புகளைத் தரும் டாக்டர் அப்துல் கலாம்
§ கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ
தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் துாங்க விடாமல் பண்ணுவது ஏதுவோ அதுவே (இலட்சிய)
கனவு
- டாக்டர் அப்துல் கலாம்
§ நீங்கள்
வகுப்பில் ஒரு மாணவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு
அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. அம்மாணவர் பற்றியும் தெரிந்திருத்தல் அவசியம்
- பேராசிரியர் யஷ்பால்.
§ நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.. ஆனால், ஒவ்வொரு
விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது..! -
சேகுவேரா
§ சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண், படிக்காமல்
சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்.
§ புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்.
சேகுவேரா
§ ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது
எவ்வளவோ மேல்…
சேகுவேரா
§ நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி
சாத்தியமற்றது என்பதல்ல - சேகுவேரா
நம்
பள்ளி வாயிலில் தினம் ஒரு வாசகத்தை எழுதி, அதை தினமும் மாணவர்கள் வாசிக்க
பழக்குவோம்... மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்கும் ...
த. ஐயப்பன், முதுநிலை விரிவுரையாளர், DIET,
கீழ்பென்னாத்தூர்
கருத்துகள்
கருத்துரையிடுக