கற்பது என்பது என்ன?

§  கற்பது என்பது மனநிலையில் மாற்றம், அறிவு நிலையில் உயர்வு, திறனில் மேம்பாடு ஆகிய மூன்று வகையில் மாற்றங்களைத் தருவதாக அமையவேண்டும்.
·        சுயசிந்தனையையும், விசாலமான தேடுதலையும் தூண்டிவிடுகிற கல்விதான் ஆராய்ச்சியையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும், சமூகத்திற்கும், வாழ்விற்கும் வளம் சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல்களையும் உருவாக்கித் தர இயலும்.
·        கல்வி பாரமாக அவர்கள் மீது கவிழ்கிறது. அவர்கள் சுமக்கமுடியாமல் கேடுண்டாடுகிறார்கள்.
·        தேர்வு வரை மட்டுமே தெரிந்தால் போதும் என்பதில் இருந்து மாறுபட்டு வாழ்நாள் முழுமைக்குமான ஆழ்ந்த அனுபவத்தைப் படிப்பதன் மூலம் பெறுவதற்குத்தான் கல்வியும், தேர்வுகளும். 
·        துருவித்துருவி அறிவதுமாக நிகழ்கிற வாசிப்பு நினைவுத் தூண்களாக நெஞ்சை நிமிர்த்தி நிற்பதையும் நான் காண்கிறேன்.
·        தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி "Knowledge is past. Intelligence is presentகூறுவதுபோல் அறிவு கடந்த காலத்தைச் சார்ந்தது; நுண்ணறிவு என்பது தற்சமயம் நிகழ்வது. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் போதும் உற்றுகவனிப்பதும், அவருடன் பிறழாமல் பாடத்தைப் பின்தொடருவதும் அவசியம். படிப்பதைவிட கேட்கும்போது அதிக விழுக்காடு மனத்தில் நிற்கிறது என்பதே உண்மை.

நல்ல சிந்தனைகளை விதைப்போம் ... 

                    த. ஐயப்பன், முதுநிலை விரிவுரையாளர், DIET, கீழ்பென்னாத்தூர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்