நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்… 1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை , உங்கள் பிரச்சினைகள் உட்பட. 2 சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. 3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம் , சிரிப்புதான் உன் வலியை தீர்த்து வைக்கும். 4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு. 5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…! 6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி. 7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால் , நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது. 8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு , ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும். 9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது. 10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால் , நான் அழும்போது அது சிரிப்பதில்லை. 11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால் , ஆசைப்பட்டதை மறந்து விடாதே. 12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால் , உன் சிரிப்பு ஒர...
இடுகைகள்
மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கற்பது என்பது என்ன? § கற்பது என்பது மனநிலையில் மாற்றம், அறிவு நிலையில் உயர்வு, திறனில் மேம்பாடு ஆகிய மூன்று வகையில் மாற்றங்களைத் தருவதாக அமையவேண்டும். · சுயசிந்தனையையும் , விசாலமான தேடுதலையும் தூண்டிவிடுகிற கல்விதான் ஆராய்ச்சியையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் , சமூகத்திற்கும் , வாழ்விற்கும் வளம் சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல்களையும் உருவாக்கித் தர இயலும். · கல்வி பாரமாக அவர்கள் மீது கவிழ்கிறது. அவர்கள் சுமக்கமுடியாமல் கேடுண்டாடுகிறார்கள். · தேர்வு வரை மட்டுமே தெரிந்தால் போதும் என்பதில் இருந்து மாறுபட்டு வாழ்நாள் முழுமைக்குமான ஆழ்ந்த அனுபவத்தைப் படிப்பதன் மூலம் பெறுவதற்குத்தான் கல்வியும் , தேர்வுகளும் . · துருவித்துருவி அறிவதுமாக நிகழ்கிற வாசிப்பு நினைவுத் தூண்களாக நெஞ்சை நிமிர்த்தி நிற்பதையும் நான் காண்கிறேன். · தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்...
பள்ளிக்கூடம் என்பது என்ன?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பள்ளிக்கூடம் என்பது என்ன? பள்ளிக்கூடம் என்பது பரவசம் தருகிற இடமாக எப்போது மாறப்போகிறது ? பாடம் என்பது எப்போது சுயதேடலாகப் போகிறது ? நிச்சயம் அம்மாற்றத்தைக் காணுகிற தாரக மந்திரம் நம்முடைய கைகளில்தான் இருக்கிறது என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சொன்னதைத் திருப்பிச் சொல்கிற கல்வியும் , மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்ற வீட்டுப்பாடமும் , அட்சரம் பிறழாமல் அப்படியே எழுதுகிற தேர்வும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டம் காண்கின்றன. போனவருடம் வாசித்ததைக் கூட இந்த வருடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. Desirable change in skill, knowledge and attitude என்பதுதான் கற்றுக்கொள்வதன் சாராம்சம் . இந்த கருத்துக்களிலிருந்து வளர்ச்சி நிகழாவிட்டால் படித்ததை அப்படியே ஒப்பித்தலால் எந்தப் பயனுமில்லை. கற்றுக்கொள்வது, நம்மை நிரந்தரமான மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக அமையவேண்டும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள் மகா அலெக்சாண்டர் , பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது , அவர் நோய்வாய்ப்பட்டார் , அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி , " நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன் , எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன , தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) " என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும் " என்றார். 2) " எனது சவப்பெட்டியை கல்லறைக்கு கொண்டு செல்லும் போது , நான் சேகரித்த செல்வங்களை எனது உடல் கல்லறைக்கு செல்லும் பாதையில் வரிசையாகவையுங்கள் " என்று கூறினார். 3) " எனது மூன்றாவது மற்றும் கடைசி ஆசை என்னவென்றால் , எனது இரண்டு கைகளும் என் சவப்பெட்டிக்கு வெளிய தொங்கவிடப்பட வேண்டும் " என்று அலெக்சாண்டர் கூறினார். தளபதிகள் தங்கள் மன்னரின் கடைசி விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டனர் மற்றும் அவ்வாறு செய்வதற்கான காரணத்தை அவரிடம் கேட்டனர். அலெக்சாண்டர் ...
பள்ளி குழந்தைகள் சிந்திக்க தினம் ஒரு வாசகம் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிந்திக்க தினம் ஒரு வாசகம் ... § வீரம் என்றால் வாழ்வு பயம் என்றால் மரணம் -விவேகானந்தர். § புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை , விதைக்கப்படுகிறார்கள் - சேகுவேரா. § விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை - நற்சிந்தனைகளை குழந்தைகள் உள்ளத்தில் விதைப்போம் - நம்மாழ்வார் , § ஒருவனுக்கு மீனைக் கொடு ; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு ; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய் - லாவோட்சு . § எண்ணங்களை நல்லெண்ணங்களாக மாற்றிப் பயிரிடுங்கள் ; அது வெற்றியை அறுவடை செய்யும் - வில்லியம் ஜேம்ஸ். § ஒழுக்கம் உள்ளவனாகவும் , நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ , அச்சமோ கொள்ளத் தேவையில்லை - கன்பூசியஸ். § நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும் , படிப்பதன் மூலம் படிக்கவும் , ஓடுவதன் மூலமே ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள் - அனடோல் பிரான்ஸ். § சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை...
கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அலகு 8 - கற்றல் வகைகள் , நிலைகள் மற்றும் அணுகுமுறைகள் 2 மதிப்பெண் வினா 1. கற்றல் விதிகள் இரண்டினைக் கூறுக. · அறிவு சார்ந்த கற்றல் விதிகள் · தூண்டல் - துலங்கல் கற்றல் விதிகள் 4 மதிப்பெண் வினா 2. பொதுவான கற்றல் விதிகள் பற்றி எழுதுக . a) தூண்டல் - துலங்கல் கற்றல் விதிகள் ( Stimulus- Response Bond ) · நடத்தைக் கோள்கையினர் கற்றல் தூண்டல் துலங்கலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். · முயன்று தவறி கற்றல் , ஆக்கநிலையுறுத்தல் போன்றவை தூண்டல் – துலங்கல் கற்றலில் அடங்கும். b) அறிவு சார்ந்த கற்றல் விதிகள் ( Cognitive Learning ) · தூண்டல் - துலங்கல் கற்றல் விதிகள் குருட்டு மனப்பாடம் செய்வதற்கே துணைபோகிறது. · அறிதல் , புரிதல் , பகுத்தல் , தொகுத்தல் , கண்டுணர்தல் ( synthesizing ) போன்ற அறி...